கடுகின் மருத்துவத் தன்மை
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இத்தகைய சிறப்பு மிக்க கடுகிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
பொதுவாக நாம் கடுகை சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்துகிறோம். அதாவது, நாம் சமைக்கும் சமையல் ஜீரணமாக அடிப்படையான கடுகை முதலில் போடுகிறோம். ஏன் என்றால் கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் பித்தம், கபம் போன்றற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும்.
விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கும், 2 கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.
தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாகும்.
கடுகை தூள் செய்து வெந்நீரில் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணமாக்கும்.
கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும்.
கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும். உடனடியாக விரைப்பு சீராகும்.
கடுகு, பூண்டு, வசம்பு, கருவாப்பட்டை, கழற்சிக்காய், கடுகு, ரோகிணி ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி இருவேளை வீதம் ஒரு வாரம் குடித்து வர வாதம், வாய்வு, குத்தல் பிரச்சினை குணமாகும்.
கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்.
_________________________________________________________________________________
நட்சத்திர பழம் STAR FRUIT
பழங்களின் மருத்துவப் பயன்கள் எண்ணற்றவை. உடலுக்கு நேரடியாக பலனை கொடுப்பவையும் இவையே. நட்சத்திரப் பழத்தின் மருத்துவக்
குணங்களை தெரிந்துகொள்வோம்.
நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில்
அதிகம் விளைவிக்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது.
இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர்.
மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா , ஹவாய், பிளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். மேலும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று. குளிர் காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும்.
மலச்கிக்கலைப் போக்க
ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும்
வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம்.
மூல நோயின் பாதிப்பு குறைய
அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூல
நோயின் பாதிப்பிலிருந்து விடுபட ஸ்டார் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம்
குறையும்.
சரும பாதுகாப்பு
மழைக் காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். ஸ்டார் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி
ஸ்டார் பழத்திற்கு உண்டு. ஸ்டார் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நரம்புகள் பலப்பட
ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம்
சீர்படும்.
10 கிராம் ஸ்டார் பழத்தில்:
கார்போஹைட்ரேட்ஸ் – 6.73 கிராம்
சர்க்கரை – 3.98 கிராம்
கொழுப்பு – 0.33 கிராம்
புரோட்டீன் – 1.04 கிராம்
பான்தோதினிக் அமிலம் – .39 கிராம் %
போலேட் – 12 கிராம்
வைட்டமின் சி – 34.4 கிராம்
பாஸ்பரஸ் – 12 மிலி கிராம்
பொட்டாசியம் – 133 மிலி கிராம்
துத்தநாகம் – 12 மிலிகிராம்
ஸ்டார் பழம் தற்போது சென்னை, மதுரை போன்ற நகரங்களில் உள்ள பழக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஸ்டார் பழத்தை அனைவரும் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.
________________________________________________________________________________
வெந்தயத்தின் மருத்துவக் குணங்கள்!
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும். மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
_________________________________________________________________________________
உலர்ந்த திராட்சை கவனத்திற்கு
சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.
உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர்.
எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.
அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.
குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டும்.