PAGE 6

பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.

* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.

* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.

* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.

* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
_________________________________________________________________________________

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் விளையும் நன்மைகள்..!

1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.

2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.

4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.

6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.

8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.

9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.

10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.
_________________________________________________________________________________

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!
இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே நிச்சயம் தெரியும். அத்தகைய இஞ்சியைத் தட்டி பாலுடன் சேர்த்து குடித்தால், உடலில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வைக் காணலாம்.
குறிப்பாக இஞ்சிப் பால் குடித்தால், இரத்தக் குழாய்களில் தங்கி அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்கள் கரையும், வாய்வுத் தொல்லை நீங்கும். அதுமட்டுமின்றி, பலரும் குனிந்து தன் பாதத்தை பார்க்க முடியாத அளவிலான தொப்பையைக் குறைக்க முடியும்.
ஆரோக்கியமான நுரையீரல் :-
நீங்கள் சிகரெட் பிடிப்பவர்களா? அப்படியெனில் இஞ்சிப் பால் குடியுங்கள். ஏனெனில் இப்பாலைக் குடித்தால், சிகரெட் பிடித்து நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, நுரையீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
சளி :-
சளித் தொல்லையால் அவதிபடுபவர்கள் சளித்தொல்லைகளிருந்து உடனடி நிவாரணம் பெற இஞ்சிபால் குடிக்கலாம்
வாய்வு தொல்லை :-
வாய்வு தொல்லையால் அவதிபடுபவர்கள் வாய்வு தொல்லைகளிருந்து உடனடி நிவாரணம் பெற இஞ்சிபால் குடிக்கலாம்
புற்றுநோய்க் கட்டி :-
பெண்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிப் பால் குடித்து வந்தால், சினைப்பையில் வரும் புற்றுநோய்க் கட்டிகளை நீக்கலாம்.
இரத்த குழாய் அடைப்பு :-
குண்டாக இருப்பவர்கள் இஞ்சிப் பால் குடிப்பது நல்லது. ஏனெனில் அதிக அளவிலான கொழுப்பு பதார்த்தத்தை உட்கொண்டு, இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படுவதை தடுப்பதோடு, இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான முறையில் செல்ல இஞ்சிப் பால் வழிவகுக்கும்.
தொப்பை :-
தினமும் இஞ்சிப் பால் அருந்தி வர, படிப்படியாக தொப்பையைக் குறைக்கலாம்.
இஞ்சிப் பால் குடிக்கக்கூடாதவர்கள் :-
வாய்ப்புண், அல்சர், மூலம் உள்ளவர்கள், இஞ்சிப் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இப்பிரச்சனை தீவிரமடையக்கூடும்.
இஞ்சிப் பால் செய்முறை :-
1 பெரிய துண்டு இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, அதனை தட்டி, 3/4 கப் நீரில் போட்டு, அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஒரு கப் பாலை நன்கு காய்ச்சி, அதில் இஞ்சி சாற்றினை ஊற்றி, அத்துடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்தால், இஞ்சிப் பால் ரெடி!
_________________________________________________________________________________