PAGE 15

NATURAL   MEDICINE

வேப்பிலையின் பயன்கள் பற்றி தெரியுமா?  NEEM 

வேம்பின் பல பயன்களை பற்றி அறிந்திருப்போம். வேப்பிலையை வேறு எந்த மாதிரி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என இங்கே பார்க்கலாம். பித்த பிரச்சனை மற்றும் கிருமியால் அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைகிந்துவிடும். உடலில் உள்ள ஒரு சிறு கிருமிகளும் அழிந்து விடும். 

வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும். அந்த பொடியை தணலில் போட்டு வீடு முழுவதும் புகையை பரவ விட்டால் விஷப்பூச்சிகள், கொசு, மூட்டைபூச்சி தொல்லைகள் ஓழிந்துவிடும். தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு ஒரிரு மணி நேரம் கழித்து குளிக்க தோல் வியாதியே வராமல் இருக்கும். வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல் நிற்கும். 

வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஓழியும். வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும். வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது. வேப்பிலைக் கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனைச் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும். 

வேப்பங்கொழுந்தை பசு மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்ணில் பூசினால் சீக்கிரம் காயம் ஆறும். வேப்பங்கொழுந்து இலையை அரைத்து ஒரு கோலி அளவு எருமை தயிரில் மூன்று நாட்கள் உள்ளுக்குள் உட்கொண்டு வந்தால்தொண்டைக்கறமல் குணமாகும். வேப்பம் பூ, மிளகு, இவை இரண்டையும் சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை கோளாறு நீங்கும். வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுகி வந்தால் முகம் பளபளப்பு அடையும். மழைக்காலங்களில் ஈக்கள் தொல்லை அதிகமாகும். 

ஈக்கள் தொல்லையை விரட்ட வேப்பிலையை கசக்கி டைனிங்டேபிளில் வைத்து விட்டால் ஈக்கள் வராது.மாத விலக்கின் போது வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் 3 கொத்து வேப்பிலையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து கொதிக்கும் முன்னர் மஞ்சள் சேர்த்து குடித்தால் வயிற்று வலி குணமாகும். தலையில் நீர் கோர்த்து தலைவலியால் அவதி படுபவர்கள் இந்த வேப்பிலை மஞ்சளை நன்கு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குணமாகும்.
________________________________________________________________________________

ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம்

துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பலமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல உடல் சுகாதார நலன்களை கொண்டுள்ளது. பழங்கள் மட்டும் மருத்துவ பலன்களை கொண்டுள்ளாமல் இலைகளும் மருத்துவ பலன்களை கொண்டு செயல் படுகிறது. சில துரியன் பழம் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது என கருத்தும் வெளியாகிறது..

உண்மையில் அவ்வாறு சொல்வதில் தவறு ஏதும் இல்லை துரியன் பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் மற்றும் உயர்நிலை கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கூறுகின்றனர். போதுமான அளவு துரியன் பழம் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உடல் நிலைக்கு மிகவும் நல்லது. துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்பு, ரிபோப்லாவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம், வைட்டமின் சி, நார்ச்சத்து , துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் உள்பட பல சத்துகளை கொண்டுள்ளது.

வாழை பழத்தை விட 10 மடங்கு இரும்பு, பாஸ்பரஸ் அதிகம் கொண்டுள்ளது. ஒரு 100 கிராம் துரியன் பழத்தில் 520 கிராம் உற்பத்தி திறன், 1 கிராம் நார்ச்சத்து, கொழுப்பு 2.5 கிராம், புரதம் 28 கிராம், கார்போஹைட்ரேட் மற்றும் நீர் 66 கிராம் கொண்டுள்ளது. துரியன் பழத்தின் சதை மஞ்சள் காமாலை நோயால் அவதி படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. துரியன் பழத்தின் வேர்கள் நகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாவும் பயன்படுகிறது-. துரியன் பழத்தில் உள்ள மாங்கனீசு நிலையான இரத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

துரியன் மரத்தின வேர், இலை, போன்றவற்றை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால் சுரவெதிரியில் இருந்து குணம் பெறலாம். துரியன் பழம் கொண்டுள்ள பி வைட்டமின், பொட்டாசியம், கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. துரியன் பழத்தின் தோல் கொசுக்கடியை தடுக்க உதவுகிறது. துரியன் பழம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த சோகையை சரிசெய்கிறது. கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும்.

இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும். மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.இந்த பழத்தில் கொண்டுள்ள பாஸ்பரஸ் பல் சுகாதாரத்திற்கு உதவுகிறது. துரியன் பழத்தில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருளான வைட்டமின் சி உள்ளதால் முதிர்ச்சியை தடுத்து இளமையை தக்க வைத்துக்கொள்கிறது.

துரியன் பழம் பைரிடாக்சின் உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால் தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.. உடலில் ஏற்படும் கட்டிகளை தடுக்கிறது. காப்பர் மற்றும் ரிபோப்லாவின் கொண்டுள்ளதால் தைராய்டை பராமரித்து ஒற்றைதலைவலிக்கு நிவாரணம் அளித்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கிறது. துரியன் பழத்தின் இலை மலச்சிக்கலுக்கு தீர்வு வழங்குகிறது. தயாமின் மற்றும் நியாமின் கொண்டுள்ளதால் பசியை தூண்டுகிறது. படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு துரியன் பழத் தோல் மருந்தாக பயன்படுகிறது.
_________________________________________________________________________________

நோய் தீர்க்கும் நிவாரணி இஞ்சியின் மகிமை :  GINGER

இயற்கையாக கிடைக்கும் ஒன்றாக இஞ்சி விளங்குகிறது. அதன் மகிமை அளப்பெரியது. எனினும் சிலர் இஞ்சி பாவிப்பதே இல்லை. ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் மகிமை பற்றி அவர்களுக்கு தெரியாது. அவர்கள் அதன் மகிமையை அறிய முயல்வதில்லை.

இஞ்சியின் மகிமை பற்றி எமது பாட்டிமாரை கேட்டாலே போதும். அதன் மகிமைகள் பற்றி கூறுவார்கள் . பல வருத்தங்களுக்கு நோய் தீர்க்கும் நிவாரணியாக இஞ்சி பயன்படுகின்றது.

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும். இனி இருமல் , சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். பலன் கிடைக்கும் .
உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இயற்கை மூலிகைகள் தான். இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சியும்.
மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு. கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்துp பாருங்கள்.

சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு. சாப்பாடு ஜீரணம் அடையாதவர்கள் இஞ்சி சோடா வாங்கி குடித்தால் உடனே உணவு ஜீரணம் அடையும்.
இஞ்சியின் அருமை பெருமைகளை சொல்லி கொண்டே போகலாம் .
_________________________________________________________________________________

கண்களைக் காக்கும் காவலன்

பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிக முக்கியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் காய்கறிகளை சாப்பிடவேண்டும் .

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.

குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும். அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை கண் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது.

கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.

கறிவேப்பிலை, கேரட் கண்களை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது . இவை இரண்டும் கண்களின் காலலனாக விளங்குகிறது. தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.
_________________________________________________________________________________

இதுவரை தெரிந்திராத ‘சரஸ்வதி மூலிகை’ அதாவது வல்லாரையின் மருத்துவக் குணங்கள்

மூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வரும் வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம். அவை பற்றி…

* வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.

* வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

* வல்லாரை இலையுடன் சம அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.

* குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.

* ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரையை ‘சரஸ்வதி மூலிகை’ என்றும் அழைக்கின்றனர்.

* வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

* வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.

* இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.

* வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.

* நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.

* யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். அதுபோல விரை வீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும்.

* வல்லாரை இலையை முறைப்படி எண்ணையாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.
________________________________________________________________________________


கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!

பசலைக் கீரை

பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

சிக்கன்

கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

அஸ்பாரகஸ்

கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.

வெண்டைக்காய் .

பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலி

சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

முட்டை

முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

சால்மன்

பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

தயிர்

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.
_____________________________________________________________________________