PAGE 5

இளநீரின் மருத்துவ குணங்கள்:

இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம் (Isotonic Drink). இது உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று; பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. மூல நோய், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் இரண்டு குவளை இளநீர் அருந்துவது என்பது ஒரு பாட்டில் சலைன் ஏற்றுவதற்குச் சமமாகும். கடும் நீரிழப்பின் போது (severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியுமாம்.

மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகிட ஒரு மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். சிறுநீர்ப்பாதையில் சில நேரம் புண்ணாக இருந்தால் கிருமிகள் அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரைக்கால் கரண்டி தூள் செய்து கலந்து பருகிவர ஐந்து நாட்களில் அவை நீங்கும்..

பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான்.

டைபாய்டு மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் டிப்தீரியா நிமோனியா வாந்திபேதி வயிற்றுப்புண் மலச்சிக்கல் சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும்.

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும். கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண், ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

உடலுக்குக் கேடு தரும் பல்வேறு வேதிப்பொருட்களை உள்ளடக்கிய கார்பானிக் குளிர்பானங்கள் (Carbonated Drinks), பனிக்கூழ் (Ice cream) ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தரும் இயற்கை பானமான இளநீரைப் பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.
________________________________________________________________________________

வறட்டு இருமல் குணமாக…!

மாதுளம்பழச் சாறுடன் சமமாக இஞ்சி சாறு கலந்து, இத்துடன் தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும். நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு ஆப்பிள், அல்லது வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் வாழைத்தண்டு ஜூஸ் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் நல்லதல்ல.

மழைக்காலங்களில் கால் விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப் புண் குணமாக மஞ்சள் தூளுடன் தேனைக் கலந்து களிம்பு போல பூசலாம். இரண்டு டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் கீழாநெல்லியை வேரோடு பிடுங்கி நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து 9 நாள் குடித்து வர நோய் குணமாகும்.

தினமும் சப்போட்டா பழ ஜூஸ் பருகி வர முடி நன்றாக வளரும். முடி உதிர்வது நிற்கும். பதினைந்து வில்வ இலையை கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்தால் வயிற்றுப்புண் குணமாகும். மோரில் இஞ்சியை நறுக்கிப் போட்டு, கொத்தமல்லி இலையைக் கிள்ளிப் போட்டு குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகப் பருக்கள் நீங்கி புத்துணர்ச்சி பொங்கும். தண்டுக்கீரைச் சாற்றைத் தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்; முடி உதிர்வதும் குறையும். மன அழுத்தத்துக்கு மக்னீசியம் சத்து குறைபாடும் ஒரு காரணம். பசலைக்கீரையில் அதிக மக்னீசிய சத்து உண்டு. வாரத்துக்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்தால் மன அழுத்தம் போயே போச்சு.

மாதுளை ஜூஸை 40 நாள் தொடர்ந்து அருந்தி வந்தால் பெண்களின் மாதாந்திரப் பிரச்னைகள் நீங்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பேரீச்சம்பழம் நகங்களுக்கு வலு தரும். தினமும் இரண்டு பேரீச்சம்பழமும் ஒரு கப் பாலும் சாப்பிட்டால் அழகிய நகம் வளரும்.
_____________________________________________________________________________

சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை.

1.சுக்கு,மிளகு,திப்பிலி
இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்...லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி
தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்
இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.
__________________________________________________________________________________
உணவே மருந்து !!! ஹெல்த் டிப்ஸ்

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்

A + B + C .......ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஸ்மூதி போல அரைத்து அருந்தவும்

.விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் .

இந்த பானம் அருந்துவதால் பயன்கள் ::

புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க வல்லதாம் இந்த ஜூஸ் ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது

மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது . உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது

இரத்தத்தை சுத்தபடுதுகின்றது பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு ,உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல பலன் உண்டு .

கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள்  அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும் .
__________________________________________________________________________________

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!

HAர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.

* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.
* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
_________________________________________________________________________________

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
__________________________________________________________________________________